- இங்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூரணப்படுத்தும் போது நூறு சதவீதம் உண்மையான விடயங்களை மட்டும் வழங்குதல்.
- விண்ணப்பப் படிவத்தைப் பூரணப்படுத்தி அனுப்பியதன் பின்னர் அது சரி பார்க்கப்பட்டு இணைத்துகொள்ளப்பட்ட பின்னர் எமது கல்வி நிலையத்தின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க கடமைப்பட்டவராகின்றீர்கள்.
- மாணவர்கள் சிறந்த பிரஜைகளாகவும், பல்லின சமூகங்களோடு இணங்கி வாழக்கூடிய மனநிலையை உருவாக்கும் நோக்கில் கற்பிக்க வேண்டும்.
- மதவாத, இனவாத, பிரிவினைவாத, ஒழுக்க வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மற்றும் பல்லின சமூகங்களின் இன, மத, கலாசார விழுமியங்களை கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- மாணவர்களை நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு, தேசத்தையும், உலகையும் கட்டியெழுப்பும் சாதனை வீரர்களாக உருவாக்கும் வகையில் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
- குறித்த காலப்பகுதிக்கான வீடியோக்களை தாமதமின்றி தயார்செய்து தருதல், tute/assignment மற்றும் அவற்றுக்கான விடைகளை உரிய நேரத்தில் ஒப்படைத்தல்.
- மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து, அவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியான செயல்பாடுகளை பேணிக் கொள்ளல்.
- ஒரே பிரிவுக்கு ஒரே பாடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கற்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதால், மாணவர்களை தொடர்ந்து ஈர்ப்புடன் கற்பித்தல்.
- ஒவ்வொரு மாத முடிவிலும், சம்பளக் கொடுப்பனவுகளை வங்கிக் கணக்கிலதான் பெற்றுக்கொள்ளல்.
- எமது கல்வி நிலையத்துக்காக ஆசிரியர்களால் வழங்கப்படும் கற்றல் வீடியோக்களையும், ஏனைய உள்ளடக்கங்களையும் முழுமையாக பயன்படுத்த கல்வி நிலையத்துக்குப் பூரண உரிமை உண்டு. அவை இக் கல்வி நிலையத்தின் சொத்துக்களாகவே கருதப்படும்.
- ஆசிரியராக இணைந்து கொண்டு, கல்வி பணிகளில் ஈடுபடுபவர்கள் சுய விருப்பத்தின் பேரில் விலகினாலும், முன்னறிவித்தல் வழங்கி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லாமல் விலகிக் கொள்ள முடியும்.
- இக் கல்வி நிலையத்தில் கற்பிக்க பொருத்தமற்றவர் எனில், ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்தவோ, முற்றிலுமாக நீக்கவோ கல்வி நிலையத்துக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்களின் கருத்துக்களுக்கு முழுமையான பொறுப்பாளர்கள் ஆவர்.
- வாக்களிக்கப்பட்ட நலன்கள் ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை என்று கருதப்பட்டால் அல்லது வேறு குறைகள் ஏற்பட்டால், கல்வி நிலையத்தின் பணிப்பாளருக்கு தெரிவித்து அழகிய முறையில் தீர்வு காண முடியும்.
- அரசு பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு அதே பாடத்தை எமது கல்வி நிலையத்தில் அதே ஆசிரியரிடம் கற்பிக்கும்போது, அதே பாடத்துக்கான கட்டணங்களில் இருந்து விலகலைக் கோர முடியும்.
- அநாதைப் பிள்ளைகள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு, ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் நிபந்தனைகளுடன், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கட்டண சலுகைகள் அளிக்கப்படும்.
- இக் கல்வி நிலையத்தின் எந்தவொரு நடைமுறை மற்றும் நிபந்தனையையும் மாற்றுவதற்கான அதிகாரம் கல்வி நிலையத்துக்கு உண்டு. அவை ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வழிகாட்டப்படும்.
- இக் கல்வி நிலையத்தில் இணைந்த மாணவர்களின் தனிப்பட்ட விடயங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது. அதேபோல், ஆசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களும் தொடர்பு இலக்கங்களும், ஏனைய தனியார் வகுப்புகளின் விபரங்களும் பகிரப்படக்கூடாது. ஆனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒழுங்கான தொடர்பு ஏற்படுத்தப்பட்டு கையாளப்படும்.
- பயிற்றப்பட்ட/பயிற்றப்படாத எந்தவொரு ஆசிரியரும், எந்தவொரு பிரிவுக்கும், பாடசாலை பாடங்களோ அல்லது மேலதிக பாடங்களோ கற்பிக்க இக் கல்வி நிலையத்தில் இணைந்து கொள்ள முடியும்.
- இக் கல்வி நிலையத்தில் இணைந்த அனைத்து ஆசிரியர்களும் ஒரே குடும்பமாக இணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றுவதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிலையம் ஆகியோருக்கு மிகக் குறுகிய காலத்தில் பெரிய நலன்களை எட்ட முடியும். அந்நியோண்யமும், அன்பும் கொண்ட நடத்தை எதிர்பார்க்கப்படுகிறது.